பருவநிலை உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் முகமது பின் ஜாயத் அல் நஹ்யான் மற்றும் ஐ.நா., பொதுச்செயலாளர் அண்டனியோ குட்டெரஸ் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்தார்.
சி.ஓ.பி 28 எனப்படும் ஐ.நா.வின் பருவநிலை உச்சி மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்குமாறு பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி துபாய் புறப்பட்டு சென்றார். அவருக்கு அந்நாட்டு அரசு சிறப்பான வரவேற்பு அளித்தது.
இதனையடுத்து மாநாடு துவங்குவதற்கு முன்னதாக உலக தலைவர்கள் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
முன்னதாக, யுஏஇ அதிபர் முகமது பின் ஜாயத் அல் நஹ்யான் மற்றும் ஐ.நா., பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டெரஸ் ஆகியோரை சந்தித்தார். தொடர்ந்து பல நாட்டு தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து உரையாட உள்ளார்.