பா.ஜ.க., தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் 63வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க., தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்று (டிசம்பர் 2) தனது 63-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்; ‘‘ஜே.பி. நட்டாவின் எளிமையான மற்றும் அன்பான குணம் அவரைப் பலருக்குப் பிடித்துள்ளது. கடந்த பல தசாப்தங்களாக அவர் கட்சிக்காக கடினமாக உழைப்பதை பார்த்திருக்கிறேன்.
அவர் தன்னை ஒரு சிறந்த எம்.எல்.ஏ., எம்.பி. மற்றும் அமைச்சராகவும் சிறப்பித்துக் கொண்டுள்ளார். மக்கள் சேவையில் நீண்ட மற்றும் ஆரோக்கியமாக வாழ பிரார்த்திக்கிறேன்’’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.