மூன்று மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடியை நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.பி. சுனில் குமார் பின்டு பாராட்டி உள்ளார்.
5 மாநில சட்டசபை தேர்தல்களில் சத்தீஸ்கர், ராஜஸ்தானில் காங்கிரஸிடம் இருந்து பாஜக கைப்பற்றியது. மத்திய பிரதேசத்தில் அமோக வெற்றியுடன் ஆட்சியைத் தக்க வைத்தது பாஜக. தெலங்கானாவில் பா.ஜ.க.,வின் வளர்ச்சி சிறப்பாக அதிகரித்துள்ளது.
சட்டசபை தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு பலரும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பாஜகவை எதிரத்து வரும் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) கட்சி எம்.பியான சுனில் குமார் பின்டு,
பிரதமர் நினைத்தால் அத்தனையும் சாத்தியமாகும் என்று கூறியிருக்கிறார்.
இந்தக் கருத்து இ.ண்.டி. கூட்டணி கட்சியினர் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னரே பல கட்சித் தலைவர்கள் பாஜக பக்கம் தாவலாம், கூட்டணியில் உள்ள பல கட்சிகள் விலகலாம், எதுவும் சாத்தியம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.