சென்னையை ‘மழை வெள்ளத்தால்’ மிதக்க விட்ட விடியாத தி.மு.க. அரசு!

நேற்று (டிசம்பர் 4) மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்தது. வடிகால் அமைப்புகள் சரி இல்லாத காரணத்தால் தண்ணீர் வெளியேற முடியாமல் சாலைகளில் ஆறாக ஓடியது, பல குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து கொண்டது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் இரண்டாவது மாடி, மூன்றாவது மாடியில் தஞ்சம் புகும் நிலை ஏற்பட்டது..

மத்திய மோடி அரசின் ஸ்மார்ட் சிட்டி நிதியில் சென்னை மாநகர வடிகால் பணிக்காக 4,400 கோடியில்  சிறப்பு திட்டம் ஒன்றை விடியாத திமுக அரசு ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. இந்தப் பணிகள் 90 சதவிகிதம் முடிக்கப்பட்டது என்றும், 80 சதவீதம் முடிக்கப்பட்டது என்றும், வேறு வேறு அமைச்சர்கள் வேறு சதவிகிதத்தைச் சொல்லி பேசினர். மக்களும் 4000 கோடி செலவில் எல்லாம் சீர்திருத்தப்பட்டு விட்டது என எண்ணி மகிழ்ந்து வந்தனர். வந்தது மிக்ஜாம் புயல். வெள்ளத்தோடு வெல்லமாக திமுக அரசின் பொய்களும் கரைந்து ஓடியது திமுக அமைச்சர் மா.சுப்பிரமணியன் 20 சென்டி மீட்டர் மழை பெய்தால் கூட ஒரு மணி நேரத்தில் அதன் சுவடு தெரியாமல் மறைந்துவிடும் என்று கூறியதை மக்கள் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி என்ன ஆயிற்று என்று கேள்வி கேட்கிறார்கள்.

வெள்ளப் பகுதியை பார்வையிட நான் தயாராக இருந்தபோது, தண்ணீர் தேங்கி இருந்தால்தானே நீங்கள் வரவேண்டும், என்று என் தொகுதி மக்கள் என்னிடம் கூறினார்கள், என்று சிறிது காலத்துக்கு முன் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய வீடியோவை வைரலாக பரவ விட்டனர். 

கடந்த 28 மணிநேரத்தில் வெளுத்து வாங்கிய கனமழையால் சென்னை நகரமே கடல்போல் காட்சி அளித்தது. எங்கு பார்த்தாலும் வெள்ளம், சாலைகள் முழுவதும் ஆறுகள் போன்று தண்ணீர் ஓடியது. குறிப்பாக சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, தேனாம்பேட்டை, மாம்பலம், ஆவடி, தாம்பரம், பெருங்களத்தூர், திருவள்ளூர் பகுதிகளில், வெள்ளம்போல் மழைநீர் தேங்கியுள்ளது. குடியிருப்புகளில் முதல்மாடி வரை மழைநீர் தேக்கம் இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பிரதான சாலை முதல் உட்புற சாலைகள் வரை கால் முட்டி அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளது.

அதேபோல் நீர்நிலைகளில் கொள்ளளவை தாண்டியும் மழைநீர் வடிகால்களை மூழ்கடித்தும், குடியிருப்புகள் சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியது. வடிகால் வாய்க்கால்கள் எங்கும் அடைப்புகள். கடலில் கலக்கும் தண்ணீரை கடல் உள்வாங்காமல் எதிர்த்து அனுப்பிய நிலை! வடிகால் வாய்க்கால்களின்  கட்டுமானம் அப்படி! சென்னையையொட்டிய புறநகர் பகுதிகளில் இருந்து அதிகளவு நீர் வருவதால் சென்னை முழுதும் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் கூவம், அடையாறு, பகிங்ஹாம், கொசஸ்தலை ஆறு கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். பொதுமக்களின் இருசக்கர வாகனங்கள், மற்றும் கார், ஆட்டோக்கள் மழைநீரால் பாதிப்புக்கு உள்ளாகியது. பல்வேறு பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.  

வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகளில் சிக்கியர்வர்களை தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் ராணுவம் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து வருகின்றனர். அதே போன்று மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பா.ஜ.க., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உணவுகள் சமைத்து விநியோகம் செய்து வருகின்றனர்.

ஆட்சியில் உள்ள திமுக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள்  எங்குமே காணப்படவில்லை  என மக்கள் தெரிவித்துள்ளனர். ஒரு சில அமைச்சர்கள் மட்டும் ரிப்பன் மாளிகையில் அமர்ந்துகொண்டு மக்களுக்காக சேவை செய்வதாக போட்டோ சூட் நடத்துவதிலேயே காலத்தை ஓட்டியதையும் மக்கள் விமர்சித்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top