நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி குடியரசுத் தலைவருக்கு திமுகவால் அச்சடித்து வழங்கப்பட்ட கடிதங்கள் பொள்ளாச்சி அருகே குப்பையில் வீசப்பட்டுள்ளன. இந்தப் புகைப்படம் இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
திமுக தேர்தல் சமயத்தில் மாணவர்கள் மற்றும் மக்களிடம் நீட் விலக்கு அளிப்பதாக கூறி ஆட்சியை பிடித்தது. அதன் பின்னர் இரண்டரை ஆண்டுகள் கடந்த பின்னர் மக்கள் கேள்வி எழுப்பி வருவதால் அமைச்சர் உதயநிதி 50 லட்சம் கையெழுத்து பெற்று அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி நீட் விலக்கு பெற்றுத் தருவதாக அறிவித்தார்.
இதற்கு பொதுமக்கள் யாருமே கையெழுத்து போட முன்வரவில்லை. இதனால் பல்வேறு அரசுப்பள்ளிகளில் மாணவர்களிடம் வலுக்கட்டாயமாக திமுகவினர் கையெழுத்து பெற்று வந்தனர். இது பற்றிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதை நாம் அறிவோம்.
இந்த நிலையில், கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே சோலபாளையம் செல்லும் சாலையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி படத்துடன் அச்சடிக்கப்பட்ட நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் கடிதங்கள் குப்பையில் வீசப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது பற்றி பொதுமக்கள் கூறும்போது: திமுக தேர்தலின்போது ஒரு பெட்டியுடன் வந்து மக்களிடம் மனுக்களை பெற்று ஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர் ஆனால், அனைத்து மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பதே புரியாத புதிராக உள்ளது.
தற்போது, நீட் விலக்குக்கு எதிராக கடிதங்கள் எழுதும் திட்டத்தை அறிவித்துள்ளது. அந்தக் கடிதங்களும் குப்பையில் வீசப்பட்டுள்ளன. உண்மையில் 50 லட்சம் கையெழுத்து பெற்று அவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படுமா அல்லது இதுவும் மக்களை திசை திருப்பும் நாடகமாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.