வங்கக்கடலில் உருவாகியுள்ள ‛மிக்ஜாம்’ புயல், இன்று (டிசம்பர்4) சென்னை வழியாக ஆந்திராவுக்கு செல்கிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வாங்குகிறது. இதனால் சென்னையில் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் ஆறு போல் ஓடுகிறது.
பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் வீடுகளை விட்டு முகாம்களுக்கு வெளியேறும் நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திலும் மழை வெள்ளம் புகுந்துள்ளது. இது தற்போது இணையவாசிகளால் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.