அவர்களால் 41 சுரங்க தொழிலாளர்களை மீட்க முடியும் .. உங்களால் 11 பேரை (சடலத்தை )  மீட்க முடியாதா ? ஸ்டாலினுக்கு சராமாரி கேள்வி?

சென்னை வேளச்சேரியில் ஒரு பெட்ரோல் பங்க் அருகில் புதிதாக கட்டப்பட்டு வந்த ஒரு கட்டடம் மிக்ஜாக் புயல் மழையின்போது சரிந்து விழுந்ததுள்ளது. அதில் கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் இன்ஜினியர் உட்பட 11 பேருக்கும் மேலாக மாட்டிக் கொண்டதாக  அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இல்லை. 

சென்னை வேளச்சேரி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி கட்டம் கடந்த சனிக்கிழமை திடீரென்று சரிந்து 40 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது. அதிக மழையின் காரணமாக உள்ளே இருந்தவர்களை மீட்கும் பணியை நிறுத்தியதாக கூறப்படுகிறது.

மழை விட்டு கடந்த இரண்டு நாட்கள் கடந்த பின்னரும் இன்றுவரை புதைந்து போனவர்களை உயிருடனோ அல்லது உடல்களையோ இந்த அரசு மீட்க முன்வாரதது ஏன் என்று அவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இன்ஜினியரின் உறவினர்கள் பேசும்போது, புயல் வரும்போது அனைத்து கட்டுமானங்களை நிறுத்த வேண்டும் என அரசு கூறியது. ஆனால் அதனையும் மீறி கட்டட பணிகள் எப்படி நடைபெறுவதற்கு அரசு அனுமதித்தது.

மழை பெய்தபோது திடீரென்று சரிந்து 40 அடி பள்ளத்தில் கட்டடம் விழுந்துள்ளது. அதில் சுமார் 11 பேருக்கு மேல்  பணியாற்றி வந்துள்ளனர். எனவே அவர்களை இன்று வரை இந்த அரசு மீட்காமல் வைத்திருப்பதன் மர்மம் என்ன? 

அமைச்சர்கள் மற்றும் மேயர் உள்ளிட்டோர் வருகின்றனர். போட்டோ எடுத்துவிட்டு புறப்பட்டு சென்று விடுகின்றனர். ஆனால் உள்ளே சிக்கியவர்களை எப்போது மீட்பீர்கள் என கேள்வி எழுப்பினால் பதில் சொல்லாமல் ஓடிவிடுகின்றனர்.

மேலும் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கப்பணியில் சிக்கியவர்களை மத்திய, மாநில அரசு மீட்டது. அப்படி இருக்கும்போது தமிழகத்தில் ஒரு கட்டப்பணியின் போது குழியில் புதைந்தவர்களை ஏன் ஸ்டாலின் அரசு மீட்கவில்லை. எதற்காக இத்தனை நாட்கள் காத்திருக்கின்றனர் ? என்று கொந்தளித்தனர். 

மழை விட்ட பின்னரும் கட்டட விபத்தில் சிக்கியவர்களை இந்த அரசு மீட்காமல் இருப்பது ஏன் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். ஒருவேளை கட்டடப்பணியில் 10க்கும் மேற்பட்டோர்கள் இருந்தார்களா? அப்படி இருந்தால் அவர்கள் அனைவரும் உயிரிழந்திருப்பார்களா? இவர்களின் சடலத்தை மீட்டு விட்டால் அரசு அவப்பெயர் ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தில் இந்த அரசு அதை ஒரே அடியாக மூடி மறைக்கப் பார்க்கிறதா என்ற பல சந்தேகங்களை பொதுமக்கள் எழுப்பி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top