திருச்சி, மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த ஆரோக்கியராஜ். இவரது இரண்டாவது மகன் சுஜீத் வில்சன் 2 வயது இவன் அக்டோபர் 25ம் தேதி 2019ம் ஆண்டு மாலை 5:00 மணியளவில் வீட்டருகே உள்ள போர்வெல் குழியில் தவறி விழுந்தான். அப்போது தமிழகத்தின் ஒட்டுமொத்த மீடியாவும் மூன்று, நான்கு நாட்களாக அப்பகுதியில் முகாமிட்டு லைவ் டெலிகாஸ் செய்து வந்தனர்.
தங்களின் வாயிக்கு வந்தது எல்லாத்தையும் மீடியாக்கள் சொல்லி வந்தனர். மீட்பு பணியில் 500க்கும் மேற்பட்டோர்கள் கடுமையான முயற்சியில் ஈடுபட்டதை பார்த்தோம்.
ஆனால், இதோ இப்ப மூனு நாளா சென்னை வேளச்சேரில 40 அடி பள்ளத்துல மூழ்கிக் கிடக்குற அந்தக் கட்டிடத்துக்குள்ள இருக்கிற உயிரப் பத்தி எந்த மீடியாவும் பெரிதாக பேசவேயில்ல. அந்தப் பையன் உயிரை விட இந்தத் தொழிலாளிகளின் உயிர் எந்த வகையிலாவது குறைந்ததா? பின் ஏனிந்த பாரபட்சம்? எதனால் இதை மறைக்க நினைக்கிறார்கள்? யாரைத் திருப்திப்படுத்த இந்த வேஷம்?
தப்பித்தவறிக் கூட நிஜங்கள் நம் கண்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதில் மீடியா அத்தனை முனைப்போடு இருப்பதன் மர்மம் என்ன? அவர்களுக்கு ஆமீர் கான் மீண்டதும், ஸ்கூலுக்கு லீவு விடுவதும், 2015ஐ விட இதில் எப்படியெல்லாம் ஆளுங்கட்சி சாகசம் செய்தது எனக் காமிக்கவும் தான் நேரம் உள்ளது.
இது என்றல்ல, பல விஷயங்கள் உள்ளன. சாத்தான்குளம் போலீஸ் விசாரணை மரணம் பற்றி மொத்த மீடியாவும் கொந்தளித்தது. அதன் பின் கடந்த 2.5 ஆண்டுகளில் பல லாக் அப் மரணங்கள் அமுங்கின. பட்டியலின வாலிபர் உயிரிழந்த போது, தோழமை கூட சுட முடியாமல் தான் திருமா இருந்தார். மீடியா அஸ் யூசுவல் லியோ படத்தில் பாடலில் ஏன் அந்த வார்த்தைகள் ம்யூட் செய்யப்பட்டன என கர்மசிரத்தையோடு விவாதித்தார்கள்.
மணல் கொள்ளையின் 60,000கோடி, சின்னவர் & மருமகனாரின் 30,000கோடி ஆடியோ, அமலாக்கத்துறை விசாரணை, 4000கோடி பேக்கேஜ், சகஜமாகப் புழங்கப்படும் கஞ்சா என எதுவுமே பாமர மக்களின் காதுகளை முழுதாக எட்டிவிடக் கூடாது என்பதில் ஏன் மீடியா இவ்வளவு கண்ணும் கருத்துமாக உள்ளது? இத்தனைக்கும் அவனவன் செல்ஃபோனில் அத்தனையையும் இவர்களுக்கு முன்னதாய் பரப்பும் போதும் எந்த தைரியத்தில் அமைதி காக்கிறார்கள்?
நிஜமாகவே பத்திரிகை துறையில் இருப்பவன் இது போன்ற விஷயங்களைக் கண்டும் காணாமல் எப்படி தொழிலுக்கு விசுவாசமாய் இருக்க முடியும்? தாங்கள் இவ்வளவு தூரம் முட்டுக் கொடுக்கும் அளவிற்கு அந்த நபரோ கட்சியோ தகுதியானது தானா என யோசிக்க ஒரு பத்திரிகையாளனுக்குமா தோன்றவில்லை?
இந்த மழை வெள்ளம், அந்த வேளச்சேரி கட்டிடம், லாக் அப் மரணங்கள், கள்ளச்சாராயக் கொடுமைகள், கஞ்சா வன்முறைகள் என இவர்கள் பூசி மொழுகும் ஒவ்வொரு மரணமும் ஒவ்வொரு தொழில் துரோகமும் நிச்சயம் ஒரு நாள் திருப்பி அடிக்கும். அன்று இவர்களுக்காக உச்சி கொட்டக் கூட ஒருத்தர் இருக்க மாட்டர்.
ஜனநாயகத்தின் நான்காம் தூண் எனச் சொல்லும் அருகதையை மீடியா இழந்து விட்டது.