மிக்ஜாம் புயலால் பெரும் இன்னலுக்கு ஆளான சென்னை மக்களுக்கு நிவாரணப் பொருட்களை மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் மற்றும் பா.ஜ.க., மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் வழங்கினார்கள்.
புயல் விட்டு இன்றோடு 6 நாட்கள் ஆகியது. ஆனால் இன்னும் பல்வேறு இடங்களில் மழை நீருடன் கழிவு நீர் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகின்றனர். அது போன்றவர்கள் அத்தியாவசிய பொருட்கள் இன்றி தவித்து வரும் நிலையில் அவர்களுக்கு தேவையான அரிசி, பால், குடிநீர், பாய், போர்வை உள்ளிட்டவைகளை பாஜகவினர் வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று (டிசம்பர் 9) சென்னை வந்துள்ள மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், பாதிக்ககப்பட்ட சென்னை மேற்கு மாம்பலத்தைப் பார்வையிட்டார். பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிவாரண வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் வழங்கினார்கள். அப்போது கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
முன்னதாக மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூர் பகுதியில் மழை வெள்ள பாதிப்பு குறித்தும், மேற்கொள்ளப்பட்ட நிவாரண பணிகள் குறித்தும் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆய்வு செய்தார். இதையடுத்து, அவர் வெள்ள சீரமைப்பில் மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என உறுதி அளித்தார்.