நாடாளுமன்ற தாக்குதல் தினத்தை முன்னிட்டு வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் படத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார்.
கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி பலத்த பாதுகாப்பையும் மீறி நாடாளுமன்ற வளாகத்தில் ஒரு காரில் 9 பயங்கரவாதிகள் வந்து தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த டெல்லி போலீசார் மற்றும் பாதுகாப்புப்படையினர் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.
பயங்கரவாதிகளுக்கும் வீரர்களுக்கும் இடையிலான சண்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டு சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். பாதுகாப்புப்படையினர் மற்றும் டெல்லி போலீசார் என 14 பேர் வீரமரணம் அடைந்தனர்.
நாடாளுமன்ற தாக்குதல் நடத்தப்பட்டு இன்றோடு 22 ஆண்டுகள் ஆகிறது. வீரமரணம் அடைந்த பாதுகாப்புப்படையினர் படங்களுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.