அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு 12 ஆலய மணி மற்றும் 36 பிடி மணிகள் நாமக்கல்லில் இருந்து தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. வருகின்ற ஜனவரி மாதம் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
இக்கோவிலுக்கு தேவைப்படும் 12 ஆலய மணி மற்றும் 36 பிடி மணிகள் என மொத்தம் 48 மணிகள் நாமக்கல்லில் கடந்த ஒரு மாத காலமாக தயார் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மணிகள் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் பூஜை செய்யப்பட்டு பெங்களூருக்கு லாரி மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
அங்கிருந்த அனைத்து மணிகளும் அயோத்தி ராமர் கோயிலுக்கு அனுப்பப்பட உள்ளது. கோயில் கும்பாபிஷேக தினத்தன்று இம்மணிகள் அனைத்தும் அங்கு ஒலிக்க உள்ளன.