இந்தி மட்டுமே படித்த உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்திருப்பவர்கள் வீடு கட்டுவது, சாலைகள் போடுவது, கழிவறையைச் சுத்தம் செய்யும் ஆகிய வேலைகளை செய்கிறார்கள் என ஆணவத்துடன் தி.மு.க எம்.பி- தயாநிதி மாறன், கூறியிருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தக் கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் வலுத்து வருகிறது.
இந்த நிலையில், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பேசுகையில், தி.மு.க எம்.பி. தயாநிதி பீகார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்களையும் இழிவாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது. அதைக் கண்டிக்கிறோம். நாட்டின் பிற பகுதிகளிலிருந்து வருபவர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார்.
பாஜக எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். பீகார் மக்களை அவமதிப்பதை நிறுத்துங்கள். இ.ண்.டி. கூட்டணியை உருவாக்கிய பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஆட்சியின் நிலை காரணமாகப் பீகாரிலிருந்து தொழிலாளர்கள் இடம் பெயர்கின்றனர். யாராவது சுயமாக உழைத்து உண்டால் அவர்களை இப்படி அவமானப்படுத்துவீர்களா? இந்துஸ்தான் ஒன்றுபட்டது, யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யலாம் எனத் தெரிவித்தார்.
திமுகவை சேர்ந்தவர்கள் சமீபகாலமாக வடமாநில மக்களை அவமானப்படுத்துவது மற்றும் சனாதனம் பற்றி தவறாக பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். ஏற்கனவே உதயநிதியின் பேச்சுக்கு நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் இ.ண்.டி. கூட்டணியை மக்கள் விரட்டியடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தி படிப்பவர்கள் கக்கூஸ் கழுவுவது என தயாநிதி பேசியிருப்பது ஒட்டுமொத்த மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விரைவில் இவை வரஉள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கட்டாயம் எதிரொலிக்கும். இ.ண்.டி. கூட்டணியை ஒட்டுமொத்தமாக விரட்டி அடிப்பது மட்டும் நிச்சயம்.