பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த தினம் இன்று. டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி திரௌபதி முர்மு, முன்னாள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, துணை ஜனாதிபதி தன்கர், மேலும் மத்திய அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
வாஜ்பாய் தனது வாழ்நாள் முழுவதும் நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்தார் என பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் ‘‘இந்தியா சுதந்திரம் அடைந்து 100-வது ஆண்டு ஆகும் 2047-ன் அம்ரித் கால் நோக்கத்திற்கு வாஜ்பாயின் அர்ப்பணிப்பு மற்றும் அவரின் தூய்மையான பணி உத்வேகமாக இருக்கும்’’ என்றார்.