திருநெல்வேலி மாவட்டத்தில் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்காத விடியாத திமுக அரசின் மெத்தனப்போக்கால் 16 பேர் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை இரண்டு நாட்கள் மிக கனமழை பெய்தது. கிராமப்பகுதி மற்றும் நகரங்களில் மழை வெள்ளம் சூழ்ந்தது. ஆறு, குளங்கள், ஏரிகள், கால்வாய்களை இந்த விடியாத திமுக அரசு தூர்வாராத காரணத்தினால் மழை வெள்ளம் அனைத்தும் குடியிருப்புகளை நோக்கி ஓடத்துவங்கியது. இதனால் மக்களின் உடமைகள் அனைத்தும் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டது. இந்த மழை வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த ஒரு மாவட்டத்திலேயே 16 பேர் என்றால் மற்ற மூன்று மாவட்டங்களிலும் எத்தனை பேர் உயிரிழந்திருப்பார்கள் என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
மழை பெய்யத்துவங்கியதும் மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொண்டது. மழை வெள்ளத்தில் தத்தளித்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை ராணுவம், கப்பற்படை, விமானப்படை, கடலோர காவல்படை, தேசியப் பேரிடர் மீட்புப்படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
இந்த மிக கனமழையால் மனிதர்கள் பலரும் உயிரிழந்துள்ளனர். ஆடு, மாடு உள்ளிட்டவையும் உயிரிழந்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக் குழுவினர் நேரில் பார்வையிட்டனர்.
இதனிடையே, நேற்று மாலை வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1,064 பேர் வீடுகளை இழந்துள்ளனர்.
குறிப்பாக, 67 மாடுகள், 504 ஆடுகள், 135 கன்றுகள், 28,392 கோழிகள் உயிரிந்துள்ளன என நெல்லை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த உயிரிழப்புகள் அனைத்திற்கும் விடியாத திமுக அரசே பொறுப்பு. சரியான முறையில் ஏரி, குளம், ஆறுகளை தூர்வாரியிருந்தால் மக்கள் மிகப்பெரிய துன்பத்திற்கு ஆளாகியிருக்க மாட்டார்கள். சென்னை பெருவெள்ளத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளாமல் மறுபடியும் தென்மாவட்ட மக்களையும் நிற்கதியாய் முதல்வர் ஸ்டாலின் விட்டுள்ளார் என்பது மட்டுமே நிதர்சனமான உண்மை.