அப்ரூவராக மாறுகிறார் நியூஸ் கிளிக் அமித் சக்கரவர்த்தி! 

நியூஸ் கிளிக்கை சேர்ந்த அமித் சக்கரவர்த்தி அப்ரூவராக மாற விரும்புவதாகவும், 164-ன் கீழ் அறிக்கை அளிக்கத் தயாராக இருப்பதாகவும் கூறி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சீனாவிடம் கையூட்டுப் பெற்றுக் கொண்டு பாரதத்திற்கு எதிராக செய்திகளை புனைந்து பரப்பிக்கொண்டும், சீனாவை தூக்கிப் பிடித்து புகழ்ந்து பிரச்சார பீரங்கியாக செயல்பட்டும் வந்த செய்தி நிறுவனம் நியூஸ் க்ளிக். அர்பன் நக்ஸல் கூட்டத்தின் ஊது குழல். தற்போது இக்கூட்டதின் கதை முடிவை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது.

சமீபத்தில் நிறுவனத்தில் நடைபெற்ற சோதனையை தொடர்ந்து, நியூஸ் க்ளிக் நிறுவனம் மத்திய அரசால் முடக்கப்பட்டது. நியூஸ் க்ளிக் நிறுவனத்தின் ஹெச்.ஆர். துறையின் தலைமைப் பொறுப்பாளர் அமித் சக்ரவர்த்தி UAPA சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறார். தற்போது அவர் அப்ரூவர் ஆவதற்கு தயாராக இருப்பதாக நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் இந்த விவகாரத்தில் பிரபீர் புர்காயஸ்தா உள்ளிட்டோரின் நீதிமன்றக் காவலை நீதிமன்றம் ஜனவரி 2024 வரை நீட்டித்திருக்கிறது.

இதன் மூலம் சீன ஆதரவு ஊடகங்களின் தேச விரோத செயல்கள் விரைவில் அம்பலமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top