370வது பிரிவு நீக்கப்பட்ட பின் ஜம்மு காஷ்மீர் வளர்ச்சியில் முன்னேற்றம்: ஜனாதிபதி திரௌபதி முர்மு!

சுதந்திரத்திற்குப் பின்னர், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு சட்டம் 370வது  பிரிவு நீக்கப்பட்ட பின்னர் அம்மாநிலத்தின் வளர்ச்சியில் முன் எப்போதும் இல்லாத முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் ‘வதன் கோ ஜானோ’ எனப்படும் தேசத்தைத் தெரிந்து கொள்ளுதல் நிகழ்ச்சி கடந்த டிசம்பர் 25ம் தேதி நடைபெற்றது. ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர் பிரதிநிதிகள் குழு ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்தது.

அப்போது ஜனாதிபதி பேசியதாவது:

370 வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சியில் முன் எப்போதும் இல்லாத முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மக்களின் முன்னேற்றத்திற்காக அரசு செயல்பட்டு வருகிறது.

ஜம்மு காஷ்மீரின் இளைஞர்கள் இந்தியாவின் பிரதான நீரோட்டத்தின் ஒரு பகுதியாக மாறுவதன் மூலம் தங்கள் கனவுகளை அடைய விரும்புகிறார்கள்.

ஆனால் இன்றளவும் சில சக்திகள் காஷ்மீர் முன்னேறுவதை விரும்பவில்லை. இருப்பினும் ஜம்மு -காஷ்மீரின் முன்னேற்றத்திற்காக உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் கல்வியில் மத்திய அரசு அதிக அக்கறை செலுத்தி வருகிறது. எனவே அரசின் வளர்ச்சித் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு இளைஞர் பிரதிநிதிகள் குழு உறுப்பினர்களை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார் 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top