தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் உடலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மலர்வளையம் வைத்து தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.
நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை (டிசம்பர் 28) சுமார் 6.10 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் உட்பட பலர் இரங்கலை தெரிவித்தனர்.
இந்த நிலையில், சென்னை தீவித்திடலில் வைக்கப்பட்ட விஜயகாந்தின் உடலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த் மனைவி பிரேமலதா மற்றும் குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார்.