உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பலனடைந்த பயனாளியின் வீட்டிற்கு சென்று தேநீர் அருந்திய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் அதன் பலன்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு இலவச காஸ் இணைப்பு வழங்கி வருகிறது. இதனால் லட்சக்கணக்கான ஏழைகள் பலன் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று அயோத்தி வந்த பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை துவக்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து உஜ்வாலா யோஜனா திட்டத்தில் பலன் அடைந்தவர்களில் ஒருவரான மீரா மஜ்ஹி என்ற பெண் வீட்டிற்கு சென்றார். பிரதமரை பார்த்த குடும்பத்தினர் உற்சாகமாக வரவேற்று தேநீர் அளித்தனர். அதனை வாங்கி அன்புடன் பருகிய மோடி, ஏழைகளுக்காக மத்திய அரசு செயல்படுத்தும் உஜ்வாலா யோஜானா உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும் அதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
அப்போது, மீரா கூறுகையில் தனக்கு இலவச காஸ் இணைப்பு கிடைத்துள்ளது. முன்பு குடிசை வீட்டில் வசித்து வந்தோம். ஆனால் மத்திய அரசு திட்டத்தால் புதிய வீடு கிடைத்துள்ளது நீங்கள் வீட்டிற்கு வந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அந்த பெண் தெரிவித்தார்.
பிரதமர் வந்திருப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் உற்சாகமாக வரவேற்றனர். அவர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட பிரதமர் அவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.