நாம் அனைவரும் நம்மைச் சுற்றியுள்ள வழிபாட்டுத் தலங்களை சுத்தமாகவும், அழகாகவும், தெய்வீகமாகவும் ஆக்குவோம் என பா.ஜ.க., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் வரும் ஜனவரி 22ம் தேதி ஸ்ரீராமர் கோவிலில் நடக்க உள்ள கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவில்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி டெல்லியில் விஸ்வாஸ் நகரில் உள்ள பசுபதி நாத் கோவிலில் ஜே.பி.நட்டா தூய்மைப் பணி மேற்கொண்டார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் புனிதமான நிகழ்வு அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரட்டும். நாம் அனைவரும் நம்மைச் சுற்றியுள்ள வழிபாட்டுத் தலங்களை சுத்தமாகவும், அழகாகவும், தெய்வீகமாகவும் ஆக்குவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.