ராமேஸ்வரம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அக்னி தீர்த்த கடலில் நீராடிவிட்டு கோவிலுக்கு சென்று வழிப்பட்டார்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று (ஜனவரி 20) காலை சாமி தரிசனத்தை முடித்த பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் சென்றடைந்தார்.
ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்திற்கு சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி, அக்னி தீர்த்த கடலில் நீராடிவிட்டு கோவிலுக்கு சென்று வழிபட்டார்.
பிரதமர் வருகையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.