பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது மத்திய அரசு.
கர்பூரி தாக்கூர் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தவர்.
இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது பாரத ரத்னா. அரசியல் கலை, இலக்கியம், அறிவியல், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட துறைகளில் அளப்பறிய சாதனையை நிகழ்த்துபவர்களுக்கு மத்திய அரசு சார்பில் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தவர் கர்பூரி தாக்கூர்.
கடந்த 1970-71 மற்றும் 1977-79 கால கட்டங்களில் பீகார் முதல்வராக கர்பூரி தாக்கூர் பதவி வகித்தார். கர்பூரி தாகூர் கடந்த 1988 ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி உயிரிழந்தார். அவர் மறைவிற்கு பிறகு 35 ஆண்டுகளுக்கு பின் பாஜக தலைமையிலான மத்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது.
கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதாக அறிவித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு அனைத்து தலைவர்களும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.