புண்ணிய பூமியான அயோத்தியில், ஸ்ரீபால ராமர் திருவுருவச் சிலையை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் (ஜனவரி 22) பிராணப் பிரதிஷ்டை செய்து வைத்தார்.
இதன் மூலம் பல கோடிக்கணக்கான பக்தர்களின் தியாகம் மற்றும் தவத்தின் பலனாய், பல தலைமுறைகளின் கனவு நிறைவேறியது. இதன் மூலம் பாரத தேசத்தில் புதிய வரலாறு எழுதப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ராமர் கோவில் பிராணப் பிரதிஷ்டையொட்டி, நாடு முழுவதும் பக்தி பரவசத்துடன் கோலாகல கொண்டாட்டம் நடைபெற்றது. குறிப்பாக தமிழகத்தில் ஜெய் ஸ்ரீராம் முழக்கங்களுடன் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அயோத்திதியில் நடைபெற்ற புனித நிகழ்வை சென்னை கோபாலபுரம் வேணுகோபால சுவாமி கோவிலில், பக்தர்களுடன் அமர்ந்து எல்.இ.டி. திரையில் நேரடி ஒளிபரப்பைக் கண்டுகளித்தார் மாநிலத் தலைவர் அண்ணாமலை.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நாரதகானா சபாவில் நடைபெற்ற அயோத்தி என்ற நிகழ்வில், ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் இசையமைப்பாளரும், எம்.பி.யுமான இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டர்.
சென்னை மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபத்தில், நங்கநல்லூரிலும் பிராணப் பிரதிஷ்டை நிகழ்ச்சி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
கோவை தெற்கு தொகுதி மேட்டுப்பாளையம் சாலை காமராஜபுரம் பகுதி ஸ்ரீராமர் கோவிலில் சிறப்பு பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சென்னை ஸ்ரீவல்லப விநாயகர் கோவிலில் நடைபெற்ற அன்னதானம் நிகழ்ச்சியில் தமிழக பாஜக துணைத் தலைவர் கரு.நாகரஜான் கலந்து கொண்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
தென்காசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் திருக்கோவிலில், இந்து முன்னணி அமைப்பு சார்பில் பொது மக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மதுரையில் கேசவ சேவா கேந்திரத்தில் ராமர் கோவில் திறப்பு விழா சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சியில் உள்ள சாதனா அறக்கட்டளை அரங்கில், பால ராமர் கோவில் பிராணப் பிரதிஷ்டை பக்தி பரவசத்துடன் கொண்டாடப்பட்டது.
பெரம்பலூரில் உள்ள மதன கோபால சுவாமி திருக்கோவிலில், ராம பக்தர்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து பஜனை பாடி, ராமரை போற்றி வணங்கினர்.
கன்னியாகுமரி மாவட்டம் பேசிப்பாறை அருள்மிகு பேச்சியம்மன் கோவிலில், மாற்றுத்திறனாளி தேவசகாயம் என்பவர், குத்துவிளக்கு ஏற்றிவைக்க, பிராணப் பிரதிஷ்டை வெகு சிறப்பாக நடைபெற்றது.
அயோதியில், ஸ்ரீபால ராமர் திருவுருவச் சிலை பிராணப் பிரதிஷ்டையை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தான் அமராவதிபுதூர் ஆஞ்சநேயர் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது பக்கதர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
கோவை தண்டு மாரியம்மன் கோவிலில், ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில், வேணுகோபால சுவாமி திருக்கோவிலில், சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரில் ராமர் கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
திருப்போரில் உள்ள திருக்கோவிலில் எல்இடி தொலைக்காட்சி மூலம் பொது மக்களுக்கு அயோத்தி பால ராமர் கும்பாபிஷேக நிகழ்ச்சியை பொதுமக்கள் பக்தி பரவத்துடன் கண்டனர்.
தமிழகத்தின் பல்வேறு நகரங்களில், கிராமங்களில், அன்னதானம், சிறப்பு பூஜை பஜனை, திருவிளக்கு வைபவம், என பல்வேறு வகைகளில் பிராண பிரதிஷ்டை கொண்டாடப்பட்டது.
தமிழக அரசு, இவ் விழாக்களை தடுக்க, பல்வேறு வகைகளில் முயன்றது. ஆன்மீக பக்தர்கள் அதை முறியடித்து, தமிழகம் ‘ பெரியார் ‘ பூமி அல்ல, நாயன்மார்கள் ஆழ்வார்கள் பூமி என்ன மீண்டும் ஒருமுறை வலுவாக நிரூபித்திருக்கிறார்.