தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அச்சங்கம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்;
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு எதிராக மாற்றத்திற்கான ஊடகவியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஒரு செய்தியை செய்தியாக மக்களுக்கு எடுத்து செல்ல வேண்டிய ஊடகங்கள், ஒரு தலைவரோ அல்லது ஒரு இயக்கத்தின் மீதோ வன்மம் விதைப்பது அல்லது சேற்றை வாரி இறைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது ஏற்க இயலாதது.
பாரத தேசத்தின் முகமான தேசிய தெய்வீக சிந்தனைகளை மக்கள் மனதில் வளர்த்தெடுப்பதில் அக்கறை கொண்டுள்ள கண்ணியமிக்க தலைவர்களை கேள்விகள் என்ற பெயரில் சிக்க வைத்து, அவர்களை பொய்யாக சித்தரித்து, பின் அவர்களை வசைபாடுவது, ஒரு இயக்கத்தின் அல்லது அரசியல் கட்சியின் முகமாக செயல்படுவது என்பது ஊடக தர்மம் அல்ல.
முன்பு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, தற்போது பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அவர்கள் என குறிப்பிட்ட தலைவர் மீது தமிழகத்தின் சில ஊடகங்கள் வன்மத்தை விதைக்கும் பட்டியல் நீள்கிறது.
திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் ரெட் லைட் ஊடகங்கள் என்று சொன்ன போதும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளர் சந்திப்பில் செருப்பால் அடிப்பேன் என்ற போதும், மற்றொருமுறை பத்திரிகையாளர்களை பார்த்து மண்டையை உடைப்பேன் ராஸ்கல் என்ற போதும் தோழமை சுட்டிய ஊடகவியலாளர்கள் சங்கங்கள், பாஜக தலைவர்களான அண்ணாமலை, ஹெச்.ராஜா மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போன்றவர்களை குறி வைத்து தாக்குதல், அவர்கள் மீது வன்மம் விதைப்பது அல்லது அவர்கள் மீது களங்கம் கற்பிப்பது போன்ற செயல்களை செய்யும் ஊடகவியாளர்கள் மற்றும் அதற்கு துணை போகும் சங்கங்களை தேசிய ஊடகவியலாள நலச்சங்கம் வன்மையாக கண்டிப்பதோடு ஒரு தலை பட்சமாக நடக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக தலைவர் அண்ணமலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தும் திமுகவின் ஊதுகுழலாக விளங்கும் பத்திரிகையாளர்களை பார்ப்போம், என்.ராம், தி இந்து குழுமம், ஏ.எஸ்.பன்னீர்செல்வம், ஆர்.கோபால் நக்கீரன் ஆசிரியர், எஸ்.சீனிவாசன் புதியதலைமுறை, திருஞானம் ஆசிரியர் புன்னகை, குணசேகரன் சன் நியூஸ், கவிதா முரளிதரன், பீர் முகம்மது, அரவிந்தாஷன் சத்தியம் டீவி, தியாகச்செம்மல் நியூஸ் 7 தமிழ், மணிமாறன், சங்கர், சகாயராஜ், பிரபுதாசன், அசீப் உள்ளிட்டோர் ஆவர்.
இவர்கள் யாருமே என்றுமே பாஜகவை ஆதரித்தார்கள் அல்ல, கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் மோடி அரசின் மக்கள் நலத் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்காதவர்கள் அல்லது அது பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்களோ அல்ல. உண்மையைச் சொன்னால் இந்தியாவின் மீதுள்ள வெறுப்பால், இந்தியாவை காக்க முனையும் மோடி மீது பன்மடங்கு வெறுப்பு கக்குபவர்கள்.
இவர்கள் திமுக கட்சியின் கலரில் கண்டன ஆர்ப்பாட்ட நோட்டீஸ் அச்சடித்துள்ளனர். இவர்கள் அனைவருமே திமுக சொல்வதை மட்டுமே கேட்டுக்கொண்டு அதற்கான வேலைகளில் ஈடுபடுபவர்கள் என பொதுமக்களே இணையதளங்களில் கருத்துக்களை முன்வைத்து வருவதை பார்க்கலாம்.
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்நாள் பாரதப் பிரதமர் மோடி ஆகியோர் ஊடகங்களை சார்ந்து இருந்ததில்லை. ஊடகங்களின் எதிர்ப்பையும் மீறி வெற்றி பெற்றவர்கள். அண்ணாமலையும் அவ்வாறே வெற்றி பெறுவார் என்று சமூக ஊடக பதிவர்கள் கூறுகின்றனர்.