முருகப்பெருமானின் அருள் எப்போதும் நம் மீது இருக்கட்டும் என தைப்பூசத் திருநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு கடந்த ஜனவரி 25ம் தேதி அறுபடை வீடுகளாக திகழும் முருகப்பெருமான் கோவில்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பாதயாத்திரையாக காவடி எடுத்துச்சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில், தைப்பூசத் திருநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில்;
தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகள்! முருகப்பெருமானின் அருள் எப்போதும் நம் மீது இருக்கட்டும். இந்த நன்னாள் அனைவருக்கும் வலிமையையும் செழிப்பையும் தரட்டும். அனைவரும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன். இவ்வாறு பிரதமர் தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.