பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வரும்போது 3வது பொருளாதார நாடாக இந்தியா மாறும்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்தார்.

அப்போது அவர், பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த 10 ஆண்டு ஆட்சியில் இந்தியா பொருளாதார ரீதியாக பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் கவலைக்கிடமாக இருந்தது என்றார்,

இந்த நிலையில் நேற்று (பிப்ரவரி 04) அவர் கூறும்போது, ‘‘வரும் மக்களைவைத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வரும்போது, 2027-ம் ஆண்டுக்குள் உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும். அந்த இலக்கை எட்டுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு செய்யும்’’ என்றார்.

இது பற்றி அவர் மேலும் கூறுகையில், “கொரோனா தொற்றால் நெருக்கடி ஏற்பட்ட போதும் மத்திய அரசின் கொள்கைகளால், நாடு பொருளாதார சரிவிலிருந்து விரைவிலேயே மீண்டது. தவிர, உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாகவும் மாறியது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதாரம் மேம்பட்ட நிலையில் உள்ளது.

தற்போது ஏஐ தொழில்நுட்ப சார்ந்து அதிக முதலீடு மேற்கொள்ளப்படுகிறது. அதே சமயம் அத்தகைய தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு ஏற்படும் என்ற அச்சம் முன்வைக்கப்படுகிறது. மனிதர்களின் தலையீடு இல்லாமல் ஏஐ தொழில்நுட்பம் இயங்காது. ஏஐ சார்ந்த முதலீட்டால், பல்வேறு தளங்களில் புதிய வாய்ப்புகள் உருவாகும்” என்று அவர் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top