நெல்லையில் ‘வந்தே பாரத்’ ரயில் மீது கல்வீசி தாக்குதல்: 9 பெட்டிகள் சேதம்! பயங்கரவாத சதியா?

சென்னையில் இருந்து நேற்று (பிப்ரவரி 04) நெல்லைக்கு சென்ற வந்தே பாரத் ரயில் மீது கல்வீசி தாக்கியதில் 9 பெட்டிகளின் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கியது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், குறிப்பிட்ட தொலைவை மக்கள் விரைவாக சென்றடைய முடிகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி சென்னையில் இருந்து தாம்பரம் விழுப்புரம் திருச்சி திண்டுக்கல் மதுரை விருதுநகர் வழியாக நெல்லைக்கு அதாவது தென் மாவட்டங்களுக்கு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் இந்த ஒரே ஒரு வந்தே பாரத் ரயில் சேவை பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றது. விரைவாக சொந்த ஊர்களுக்கு செல்வதால் இந்த ரயிலில் செல்ல மக்கள் அதிகளவு ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்த நிலையில் நேற்று (பிப்ரவரி 04) சென்னையில் இருந்து மதியம் 2.50 மணிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லைக்கு புறப்பட்டது. இரவு 10.30 மணியளவில் வாஞ்சி மணியாச்சி அருகே சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ரயிலின் 9 பெட்டிகள் சேதமடைந்தன. கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து இருப்பு ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ள வந்தே பாரத் ரயில் சேவையை பொறுத்துக்கொள்ள முடியாமல் சில பயங்கரவாத சக்திகள் இது போன்று தொடர்ந்து சதிச்செயலில் ஈடுபட்டு வருகிறது. பயணிகள் செல்லும் ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top