இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாட்டில் யு.பி.ஐ., மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் முறையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக துவக்கி வைத்தார்.
இலங்கை, மொரிஷியஸ் நாட்டில் யு.பி.ஐ., மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் முறையை பிரதமர் மோடி காணொளி வாயிலாக நேற்று (பிப்ரவரி 11) துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் பங்கேற்றனர்.
இலங்கை, மொரிஷியஸ் செல்லும் இந்தியர்கள் யுபிஐ மூலம் பணம் செலுத்தலாம். கடந்த வாரம் பிரான்சில் துவங்கப்பட்ட நிலையில், மேலும் யு.பி.ஐ., பணப்பரிவர்த்தனை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: ‛‛டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு இந்தியாவில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறிய கிராமத்தில் உள்ள சிறிய கடைகளில் கூட, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தப்படுகிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள மூன்று நட்பு நாடுகளுக்கு இன்று சிறப்பான நாள். இன்று நாம் நமது வரலாற்று உறவுகளை நவீன டிஜிட்டல் முறையில் இணைக்கிறோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.