டெல்லியில் ஆம் ஆத்மிகட்சியின் ஆட்சி நடைபெறும் நிலையில், கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதில் ஊழல் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்த நிலையில், புதிய மதுபான கொள்கை வாபஸ் பெறப்பட்டது.
இருப்பினும், புதிய மதுபான கொள்கை விவகாரத்தில், பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாக எழுந்துள்ள புகாரை எடுத்து சிபிஐ விசாரணை நடத்தப்பட்டது.
இதில், சட்டவிரோதமான பணப் பரிமாற்றம் நடைபெற்றது அம்பலமாகியதை எடுத்து அமலாக்க துறையும் தனது விசாரணையை துவக்கியது. இதில் பல அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதை அடுத்து ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகள் உட்பட, சிலர் கைது செய்யப்பட்டனர். டெல்லியின் துணை முதல்வராகவும், கலால் துறை அமைச்சராகவும் இருந்த மனிஷ் சிசோடியாவும் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அரவிந்த் கேஜ்ரிவால் இடம் சிபிஐ விசாரணை நடத்தியது. அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ள சம்மன் அனுப்பியது.
ஆனால் இதுவரை ஐந்து முறை சம்மன் அனுப்பிய பின்னும் அவர் ஆஜராகவில்லை. எப்போதும் போல், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறி விசாரணையை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். இதை அடுத்து இவர் கைது செய்யப்படுவாரோ என்ற சந்தேகம் வலுவாக உள்ளது. அரவிந்த் கேஜ்ரிவால் இந்த முறை, விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தால், அவருக்கு சிக்கல்கள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக ஜார்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன், நில சுரங்க முறைகேடு வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவாலை போலவே சம்மனை தொடர்ந்து புறக்கணித்து வந்தார். பின்னர் சமீபத்தில் அமலாக்கத்துறை ஜார்க்கண்ட் முதலமைச்சர் இடம் விசாரணை நடத்தி அதிரடியாக கைது நடவடிக்கையை மேற்கொண்டது. ஹேமந்த் சோரனை போலவே அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது நிலவுகிறது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தை மதிக்கவில்லை என்று பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ஆம் ஆத்மி கட்சி, நீதித்துறையை மதிப்பதில்லை என்றும், சட்ட ஒழுங்குக்கு எதிராக செயல்படுகிறது என்றும் பாரதிய ஜனதா கட்சி விமர்சனம்செய்துள்ளது.