‛‛பட்ஜெட்டில் விவசாயத்துறைக்கு அதிக அளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’’ என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
டெல்லியில் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
கத்தாரில் தூக்குத்தண்டனை அறிவிக்கப்பட்ட இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள், பாதுகாக்கப்பட்டு பத்திரமாக இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டனர். இது போன்ற சாதனைகள் எல்லாம் பேச்சுவார்த்தைகள் மூலம் நடந்தவைகள் தான். நமது விவசாய சகோதரர்கள் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும்.
மத்திய அமைச்சர்கள் இரவு முழுவதும் விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டுக் கொண்டிருந்தபோது, அவர்களுடைய பிரதிநிதிகள் வெளியேறிவிட்டனர். அப்போது கூட பேச்சுவார்த்தை தொடர வேண்டும் என்றோம். ஆனால் அவர்கள் பேச்சுவார்த்¬யூயை தொடரவில்லை. விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுவதை, அவர்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு எனப் பார்க்கக் கூடாது என்கிறார்கள்.
விவசாயிகள் வன்முறையில் ஈடுபடக்கூடாது. போக்குவரத்து நெரிசல் காரணமாக, ஆயிரக்கணக்கான மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இது என்னுடைய வேண்டுகோள். காங்கிரஸ் ஆட்சி காலத்தை விட பாஜக அரசு அதிக அளவிலான விளைபொருட்களை கொள்முதல் செய்துள்ளது. பட்ஜெட்டில் விவசாயத்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்தல் சட்டமாக்கப்படும் என ராகுல் உறுதி அளிக்கிறார். மக்கள் வாக்களித்து அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளுக்கு மரியாதை அளிக்க மாட்டார்கள். இவ்வாறு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார்.