ராமேஸ்வரம் கோவிலில் போலியான முறையில் கோடி தீர்த்தம் விற்பனை செய்யப்படுவதால் கோவில் புகழுக்கு களங்கம் ஏற்படுவதாக பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.
ராமேஸ்வரம் கோவில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் , புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தால் பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும் என்பது ஐதீகம். இத்தீர்த்தங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மகிமை உண்டு. இதில் 22வது தீர்த்தமான கோடி தீர்த்தத்தில் நீராடினால் அனைத்து தீர்த்தங்களிலும் நீராடிய மகிமை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இதனால் கோவில் நிர்வாகம் பல ஆண்டுகளாக கோடி தீர்த்தத்தை அரை லிட்டர் பாட்டிலில் பிரசாதகமாக கோவில் 2,3ம் பிரகாரத்தில் உள்ள கோவில் பிரசாத கடையில், தலா ரூ.20க்கு விற்பனை செய்கின்றது.
புனிதம் வாய்ந்த இந்த தீர்த்தத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக, சில மாதங்களாக கோவில் கிழக்கு, மேற்கு வாசல் மற்றும் சன்னதி தெருவில் உள்ள கடைகளில் வியாபாரிகள் கோடி தீர்த்தம் எனக்கூறி 50 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். இதை தடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழக வி.எச்.பி., ராமநாதபுரம் மாவட்ட தலைவர் சரவணன் கூறியதாவது: ‘‘கோவில் பெயரில் வியாபாரிகள் போலி கோடி தீர்த்தத்தை வட மாநில பக்தர்களை குறிவைத்து விற்கின்றனர். இதனை தடுக்காமல் ஹிந்து அறநிலையத்துறை அலட்சியாக உள்ளதால் கோவில் புனிதம் கெடுகிறது,’’ என்றார்.
விடியாத திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ,பல்வேறு ஊழல்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஹிந்து அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சேகர்பாபு நமது ஆன்மிக தலங்களின் பெயர் கெடும் அளவிற்கு பணியை மேற்கொண்டு வருகிறார். இது போன்றவர்களிடம் இருந்து அறநிலையத்துறை விடுவிக்கப்பட்டு ,தனிச்சுதந்திரமாக செயல்பட்டால் மட்டுமே ஆன்மிக தலங்களின் புகழை பாதுகாக்க முடியும் என்பது அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.