டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 500வது விக்கெட் எடுத்த அஸ்வினுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. (பிப்ரவரி 17-) நடந்த போட்டியில் ,அஸ்வின் தனது 500 வது விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார்.
கும்ளேவுக்கு (619 விக்.,) அடுத்து இந்த இலக்கை அடைந்த இரண்டாவது இந்திய பவுலர் என அஸ்வின் பெருமை பெற்றார்.
அஸ்வினை வாழ்த்தி பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைத்தளத்தில் கூறியதாவது;
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 500 விக்கெட் வீழ்த்தி அஸ்வின் மகத்தான சாதனையை எட்டியுள்ளார். அவரது திறமைக்கும் ,விடா முயற்சிக்கும் இது சான்று, அஸ்வினுக்கு எனது வாழ்த்துக்கள். இவ்வாறு பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.