சந்தோஷ்காலி பேரணியில் பங்கேற்கும் பிரதமர் மோடி!

மேற்கு வங்க மாநிலத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜிகாதிகளால், பட்டியலின பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சந்தோஷ்காலியில் மார்ச் 7ம் தேதி நடைபெறும் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், சந்தோஷ்காலி பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உள்ள ஜிகாதிகளால், பட்டியலின பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்கள். இப்பிரச்னை தொடர்பாக பா.ஜ.க.,வினர் சந்தோஷ்காலியில் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களை சந்திப்பதற்காக சென்றனர். ஆனால் மம்தா அரசு போலீசை வைத்து தடுத்து நிறுத்தியது.

அப்போது ஏற்பட்ட மோதலில் பா.ஜ.க., நிர்வாகி சுகந்தா மஜூம்தாருக்கு காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், சந்தோஷ்காலி பகுதியில் பா.ஜ.க., சார்பில், வரும் மார்ச் மாதம் 7ம் தேதி பேரணி நடத்தப்பட உள்ளது. இப்பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் எனவும் கூறப்படுகிறது.

வரும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் ,ஒருநாள் முன்னதாக 7ம் தேதி சந்தோஷ்காலியில் பிரதமர் பங்கேற்கும் பேரணி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top