பெங்களூரு உணவகத்தில் வெடிகுண்டு வெடிப்பு.. 4 பேர் படுகாயம்!

பெங்களூரு ஒயிட் பீல்டு பகுதியில் உள்ள பிரபல ராமேஸ்வரம் கபே உணவகத்தில் பலத்த சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்ததில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கர்நாடக மாநிலம், தலைநகர் பெங்களூரு ஒயிட்பீல்டில் ராமேஸ்வரம் கஃபே உணவகம் மிகவும் பிரபலம் ஆகும். அங்கு இன்று மதிய உணவு நேரத்தில் அலுவலகங்களில் இருந்து வந்த மக்களின் கூட்டம் அலைமோதியது.

இந்நிலையில், ஓட்டலில் திடீரென்று வெடிகுண்டு வெடித்துள்ளது. இதில் 4பேர் படுகாயத்துடன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். படுகாயம் அடைந்தவர்களில் மூன்று பேர் உணவக ஊழியர்கள் , ஒருவர் வாடிக்கையாளர் காவல் உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

முதற்கட்ட தகவல்களின்படி, மதியம் 1 மணியளவில் ,பையில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தது. ராமேஸ்வரம் ஓட்டலில் ஏற்பட்ட வெடிவிபத்தை தொடர்ந்து ஒயிட்ஃபீல்ட் பகுதியின் துணை போலீஸ் கமிஷனர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். மேலும், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

காங்கிரஸ் ஆட்சியின் சட்டம், ஒழுங்கு இதுதானா என்று கடுமையான கண்டனத்தை பாஜக தெரிவித்துள்ளது. சமீபத்தில்தான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் பாகிஸ்தான் வாழ்க என சட்டமன்றத்தில் பேசியிருந்தார். தற்போது உணவகத்தில் வெடிகுண்டு நிகழ்ந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top