ஆவின் ஐஸ்கிரீம்களின் விலையினை ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்த்தியுள்ளது திமுக அரசு. இந்த விலை உயர்வானது நாளை (மார்ச் 3) முதல் அமலுக்கு வருகின்றது.
தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தில் பால் விற்பனை மட்டுமல்லாமல் நெய், தயிர், பால் பவுடர், குல்பி உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆவின் பொருட்களை பொதுமக்கள் அதிகளவு வாங்கி வருகின்றனர்.
தற்போது கோடை வெயில் தொடங்க உள்ள நிலையில், பொதுமக்கள், குழந்தைகளைக் குதூகலப்படுத்தும் வகையில் ஆவின்நிறுவனம் பல்வேறு வகையான ஐஸ்கிரீம்களை விற்பனை செய்து வருகின்றது.
இந்த நிலையில், ஆவின் ஐஸ்கிரீம்களின் விலை ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 65 மி.லிட்டர் சாக்கோபார் ரூ.20ல் இருந்து ரூ.25 ஆகவும், வென்னிலா ரூ.28ல் இருந்து ரூ.30 ஆகவும், கிளாசிக் கோன் வென்னிலா மற்றும் கிளாசிக் கோன் சாக்லெட் ரூ.30ல் இருந்து ரூ.35 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
மக்கள் விரோத திமுக அரசு, ஆவின் பொருட்களின் விலையை அடிக்கடி உயர்த்தி கொள்ளை அடித்து வருகிறது. இது போன்ற செயலுக்கு மக்கள் கடுமையான கண்டனங்களையும், தங்களது எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.