சம வேலைக்கு சம ஊதியம் வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் முதல்வர் ஸ்டாலின் கண்டும் காணாதது போல் உள்ளார்.
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இடைநிலை ஆசிரியர்கள், கடந்த 2022 டிசம்பர் மாதம் மீண்டும் போராட்டம் நடத்தியபோது, முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த 2023 புத்தாண்டில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 3 நபர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து, ஊதிய முரண்பாடு குறித்து கருத்துக்களைக் கேட்டு அரசுக்கு அனுப்ப உத்தரவிட்டார்.
சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து, 20204 பிப்ரவரி 19ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தை ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், 12வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கி உள்ளனர். தற்போது வரை கடந்த 12 நாட்களாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. ஆனால் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் ஸ்டாலின் மவுனம் காத்து வருகிறார்.
தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், எங்களை வஞ்சிக்க நினைப்பது ஏன் என்று இடைநிலை ஆசிரியர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.