தபால் வாக்கு வயது வரம்பு 85 ஆக உயர்வு தொடர்பாக தேர்தல் ஆணையத்துடன் கலந்து ஆலோசனை நடத்திய பின் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இதற்கான ஆயத்தப்பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தேர்தல் தேதி இன்னும் ஒரு சில நாட்களில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தலின்போது வாக்கு செலுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதானவர்கள் தபால் மூலம் வாக்கு அளிக்கலாம் என மத்திய அரசின் சட்ட அமைச்சகம் தெரிவித்தது. அது மட்டுமல்லாமல் 2019ஆம் ஆண்டு கொரோனா காலம் என்பதால் வயதானவர்களுக்கு எளிதாக பரவும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது இந்த வயது வரம்பை மத்திய சட்ட அமைச்சகம் உயர்த்தியுள்ளது. அதன்படி தபால் மூலம் வாக்களிப்பதற்கான வயது வரம்பை 85 ஆக உயர்த்தி மத்திய சட்ட அமைச்சம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இந்த முடிவை தேர்தல் ஆணையத்துடன் கலந்து ஆலோசனை நடத்திய பின் எடுத்ததாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.