கோவாவில் செயல்பட்டு வரும் கடற்படை போர் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் கட்டிடத்திற்கு சோழா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கோவாவில் செயல்பட்டு வரும் கடற்படை போர்க் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் நிர்வாகம் மற்றும் பயிற்சிக்கான கட்டிடத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மார்ச் 5ல் திறந்து வைக்கிறார். இந்த கட்டிடத்திற்கு வலிமை வாய்ந்த கடற்படையை கொண்டிருந்த சோழப் பேரரசின் நினைவாக ‘சோழா’ என பெயரிடப்பட்டுள்ளது. கட்டிடத்தின் நுழைவாயிலுக்கு ‘பாண்டியா துவார்’ என பெயரிடப்பட்டுள்ளது.
தமிழை மட்டுமில்லை தமிழ் பேரரசர்களையும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கௌரவப்படுத்தி வருவது இதன் மூலம் தெரிந்துக் கொள்ள முடிகிறது.