தமிழகக் கோயில்களில் விரைவில் வெடிகுண்டு வெடிக்கும் என்று, பெங்களூரு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் 1ஆம் தேதி பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்தது. இதில் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட 11 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வெடிகுண்டு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து என்.ஐ.ஏ., விசாரணை நடத்தி வருகிறது. மேலும் சந்தேக நபர் பற்றிய புகைப்படத்தையும் வெளியிட்டது. பல்வேறு மாநிலங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக கோயில்களில் விரைவில் வெடிகுண்டு வெடிக்கும் என்று பெங்களூரு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று (மார்ச் 06) மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மிரட்டல் குறித்து தமிழக காவல்துறைக்கு தெரிவித்த பெங்களூரு காவல்துறையினர், தங்களுக்கு வந்த மிரட்டல் மின்னஞ்சலை பெற்று சைபர் கிரைம் மூலம் விசாரணை நடத்துவதாக கூறப்படுகிறது.
திமுக ஆட்சியில் , தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் சர்வ சாதாரணமாக கடத்தப்படுகிறது. இதில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான ஜாபர் சாதிக்கை தப்பவிட்டு வேடிக்கை பார்த்து வருகிறது தமிழக காவல்துறை. இந்த நேரத்தில் ,கோயில்களுக்கு விடப்படும் வெடிகுண்டு மிரட்டலை விசாரிக்கப்போகிறார்களா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.