சனாதன பேச்சு தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உகந்தது தான் என்றும், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய அவசியமில்லை எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அமைச்சர் உதயநிதியின் சனாதன பேச்சு தொடர்பாக, எந்த அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார் என்பதற்கு அவரிடம் விளக்கம் கோர, ஹிந்து முன்னணி நிர்வாகி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அமைச்சர் சேகர்பாபு மற்றும் தி.மு.க., எம்.பி., ராசாவுக்கு எதிராகவும், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் இரு தரப்பு வாதங்கள் கடந்த ஆண்டு நவம்பரில் முடிந்தன. இதற்கான தீர்ப்பில் வழக்கு விசாரணைக்கு உகந்தது என கூறப்பட்டுள்ளது.
நீதிபதி அனிதா சுமந்த் அளித்த தீர்ப்பு:
சனாதன தர்மம் தொடர்பாக மூன்று பேரும் கூறிய கருத்துகள் தவறானது. இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உகந்ததுதான். ஆனால் இந்த வழக்கில் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய அவசியமில்லை. இந்து அறநிலையத்துறை அமைச்சர் இது போன்ற மாநாட்டில் கலந்து கொண்டிருக்க கூடாது. அமைச்சர்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு கூறி வழக்கை முடித்து வைத்தார்.