பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதி அடுத்தடுத்து இரண்டு குண்டு வெடித்தது. இதில் 10 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக பெங்களூரு போலீஸார் தனிப்படைகளை அமைத்து விசாரித்து வந்தனர்.
சந்தேகிக்கப்படும் குற்றவாளி வாடிக்கையாளர் போல உணவகத்தில் நுழைந்தது ,கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அவர் கருப்பு பேன்ட், சட்டை, வெள்ளை தொப்பி, கருப்பு கண்ணாடி, முகக் கவசம் அணிந்துள்ளார். ஆனால், குற்றவாளியை பிடிக்க முடியவில்லை.
இந்த வழக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ., சார்பில் நேற்று (மார்ச் 06) வெளியிட்ட அறிக்கையில், ‘பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளி குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானமாக வழங்கப்படும்’’ எனவும், தகவல் சொல்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் முக்கிய இடங்களிலும், வலைதளங்களிலும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.