குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக (சிஏஏ) மத்திய அரசு இன்று (மார்ச் 11) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றுவோம் என 2019 பாராளுமன்ற தேர்தலில் பாஜக வாக்குறுதி அளித்தது. அதன்படி கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மத துன்புறுத்தலால் இந்தியாவுக்கு வந்த ஹிந்து, பார்சி, சீக்கிய, கிறிஸ்தவ, புத்த, ஜெயின் மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் மசோதா 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இஸ்லாமியர்களுக்கு இச்சட்டத்தால் பாதிப்பு என்று பொய் பிரச்சாரத்தை கூறி வந்தது. இதனை உண்மை என்று நம்பி நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் இறங்கின. இச்சட்டம் தொடர்பான புதிய விதிகள் வெளியிடப்படாததால் , குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ.) இதுவரை அமல்படுத்தவில்லை.
இந்த நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம் இன்று (மார்ச் 11) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சட்டத்திற்கு பலரும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு ஆதரவையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.