நமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆயுதங்கள், வெடிமருந்துகள், உபகரணங்கள் மற்றும் ஆயுதப் படைகளுக்குள் உள்ள அமைப்புகளை ஒருங்கிணைப்பதை எடுத்துக்காட்டும் வகையில், முப்படைகளின் போர் ஒத்திகை ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நேற்று (மார்ச் 12) நடைபெற்றது. இது ‘பாரத் சக்தி’ என அழைக்கப்படுகிறது. இதனை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டு பெருமிதம் அடைந்தார்.
அதன் பின் அங்கு நடந்த நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. அதாவது ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது. இதில் இளைஞர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் 150 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு ஸ்டார்ட் அப்கள் தொடங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு ரூ.1,800 கோடி மதிப்பிலான ஆர்டர்களை வழங்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
இன்று நாம் கண்ட காட்சிகள் முப்படைகளின் வீரம், வெற்றியின் முழக்கம் உலகின் அனைத்து திசைகளிலும் எதிரொலிக்கிறது. இது புதிய இந்தியாவுக்கான அழைப்பு. பிறரைச் சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டும். அதனால்தான் சமையல் எண்ணெய் முதல் நவீன விமானங்கள் வரை அனைத்துத் துறைகளிலும் இந்தியா ‘ஆத்மநிர்பர்தா’வில் கவனம் செலுத்துகிறது. பாதுகாப்புத் துறையில் நாட்டை தன்னிறைவு அடையச் செய்ய நமது அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது.
மேக் இன் இந்தியாவின் வெற்றி நம் முன்னே உள்ளது. நமது துப்பாக்கிகள், டாங்கிகள், போர்க் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், ஏவுகணை அமைப்புகள். இதுதான் ‘பாரத் சக்தி’ ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள், தகவல் தொடர்பு சாதனங்கள் வரை அனைத்தையும் நம்மால் தயாரிக்க முடியும்.
கடந்த 10 ஆண்டுகளில், நாங்கள் பாதுகாப்புத் துறையில் நாட்டை தன்னிறைவாக மாற்றுவதற்கு ஒன்றன் பின் ஒன்றாக பெரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம், கொள்கைச் சீர்திருத்தங்களைச் செய்துள்ளோம், எம்எஸ்எம்இ ஸ்டார்ட்அப்களை உருவாக்கியுள்ளோம்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.