ஆபாச காட்சிகளை ஒளிபரப்பி வந்த 18 ஓடிடி தளங்கள் மற்றும் 17 இணையதளங்களை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் அதிரடியாக முடக்கி உள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆபாச காட்சிகளை ஒளிபரப்பி வந்த 10 செயலிகள் மற்றும் 57 வலைதள கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் ஆபாச காட்சிகளை ஒளிபரப்பி வந்த 18 ஓடிடி தளங்கள் மற்றும் 17 இணையதளங்கள் முடக்கி, மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் பலமுறை விடுத்த எச்சரிக்கைகளை பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஆபாச காட்சிகளை வெளியிட்டு வந்ததால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.