மக்களவைக்கு ஏப்ரல் 19 துவங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தேர்தல் அட்டவணையை அறிவித்தார்.
அதன்படி முதல் கட்ட தேர்தல்:
அருணாச்சல்- 2, அசாம் -05, பீஹார்- 4, சத்தீஸ்கர் – 01, மத்திய பிரதேசம் – 06, மகாராஷ்டிரா 05, மணிப்பூர் – 02, மேகாலயா -02, மிசோரம் – 01, நாகாலாந்து – 01, ராஜஸ்தான்- 12, சிக்கிம்- 01, தமிழகம் -39, திரிபுரா -01, உத்திரப் பிரதேசம் -08, உத்தரகண்ட் -05, மேற்கு வங்கம் -03, அந்தமான்- 01, காஷ்மீர்-, லட்சத்தீவு- 01, புதுச்சேரி- 01.
இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26:
அசாம் -05, பீஹார்- 05, சத்தீஸ்கர் -03, கர்நாடகா-14, கேரளா -20, மஹாராஷ்டிரா -08, மணிப்பூர்- 01, ராஜஸ்தான் -13, திரிபுரா – 01, உத்திர பிரதேசம் – 08, உத்தரகண்ட் – 05, மேற்கு வங்கம் – 03, காஷ்மீர் – 01
மூன்றாம் கட்ட தேர்தல் மே 7:
அசாம் – 04, பீஹார் -05, சத்தீஸ்கர் – 07, கோவா – 02, குஜராத் – 26, கர்நாடகா – 14, மத்திய பிரதேசம் – 08, மஹாராஷ்டிரா -11, உத்திர பிரதேசம் -10, மேற்கு வங்கம் -04, தாத்ரா நாகர் ஹவேலி- 02, காஷ்மீர் -01
நான்காம் கட்ட தேர்தல் மே 13:
ஆந்திரா -25, பீஹார்- 05, ஜார்க்கண்ட் -04, மத்திய பிரதேசம் -08, மஹாராஷ்டிரா -11, ஒடிஷா -4, தெலுங்கானா- 17, உத்திர பிரதேசம் -13, மேற்கு வங்கம்- 8, காஷ்மீர் -01
ஐந்தாவது கட்ட தேர்தல் மே 20:
பீஹார் -05, ஜார்க்கண்ட் -03, மஹாராஷ்டிரா -13, ஒடிஷா -05, உத்திர பிரதேசம் 14, அந்தமான்- 07, காஷ்மீர் -01, லடாக்- 01
ஆறாவது கட்ட தேர்தல் மே 25:
பீஹார்- 08, ஹரியானா -10, ஜார்க்கண்ட் 0-4, ஒடிசா- 6, உத்திர பிரதேசம் -14, மேற்கு வங்கம் 0-8, டெல்லி- 07
ஏழாவது கட்டம் தேர்தல் ஜூன் 01:
பீஹார் -08, ஹிமாச்சல் -04, ஜார்க்கண்ட் 03, ஒடிஷா- 06, பஞ்சாப்- 13, உத்திர பிரதேசம் -13, மேற்கு வங்கம் -09, சண்டிகர் -01 ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
எந்தெந்த மாநிலங்களில் எத்தனை கட்டங்கள்:
22 மாநிலங்களில் ஒரே கட்டமாகவும், 4 மாநிலங்களில் இரண்டு கட்டங்களாகவும், 2 மாநிலங்களில் 3 கட்டங்களாகவும், 3 மாநிலங்களில் 4 கட்டங்களாகவும், 2 மாநிலங்களில் 5 கட்டங்களாகவும், 3 மாநிலங்களில் 7 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற உள்ளது.
அனைத்து மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடக்கிறது.
இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.