ஜம்மு காஷ்மீரில் “மகாராஷ்டிரா பவன்”  : சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதின் எதிரொலி !

சட்டப்பிரிவு 370 ரத்துக்கு பின் சுற்றுலா பயணிகளுக்கான பவன் கட்டுவதற்கு ஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்க மகாராஷ்டிரா முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்கும் முதல் மாநிலம் என்ற பெருமையை பெறவுள்ளது.

மகாராஷ்டிரா பவனை மத்திய காஷ்மீரில் உள்ள புத்காமில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஸ்ரீநகர் விமான நிலையத்துக்கு அருகிலுள்ள இச்காமில் 2.5 ஏக்கர் நிலத்தில் மகாராஷ்டிரா பவன் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலத்தை ரூ.8.16 கோடிக்கு மகாராஷ்டிரா அரசுக்கு வழங்க ஜம்முகாஷ்மீர் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜம்முகாஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு சென்றிருந்தபோது துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவை சந்தித்துப் பேசினார்.

அப்போது, நிலத்தை வாங்குவதற்கான செயல்முறை தொடங்கப்பட்டதாக ஊடகத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்படுவதற்கு முன்பாக, ஜம்முகாஷ்மீரில் நிரந்தரமாக வசிப்பவர்கள் மட்டுமே அங்கு நிலம் வாங்க முடியும். ஆனால், அந்தப் பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு பிறகு தற்போது இந்தியாவில் வசிப்பவர்கள் யார் வேண்டுமானாலும் அங்கு நிலங்களை வாங்க முடியும்.

ஜம்முகாஷ்மீரில் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்படும் என கடந்த 2019ம் ஆண்டு பாஜக தேர்தல் வாக்குறுதியாக அளித்தது. அதனை தற்போது பிரதமர் நரேந்திர மோடி அரசு நிறைவேற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது

இனி வருங்காலங்களில் இது போல அனைத்து மாநிலங்களும் தங்களது சுற்றுலா விடுதிகளை ஜம்மு காஷ்மீரில் அமைக்க வாய்ப்பு உள்ளது. இது பிற மாநிலங்களில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா பயணிகளை மிக அதிக அளவில் ஈர்ப்பதற்கு ஏதுவாகும் .இதன் மூலமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சுற்றுலா மூலம் வருவாய் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top