கோவை ஈஷா யோகா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் ஏற்பட்ட திடீர் ரத்தக் கசிவு காரணமாக, அவருக்கு டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சத்குரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். தனக்கு மூளை அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. தற்போது நலமாக உள்ளேன் என குறிப்பிட்டிருந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி சத்குருவிடம் நலம் விசாரித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில்,
சத்குரு ஜக்கி வாசுதேவிடம் பேசினேன். அவர் நல்ல ஆரோக்கியத்துடன், விரைவில் குணமடைய வாழ்த்தியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.