அப்ரூவராக மாறி அரவிந்த் கெஜ்ரிவாலை அம்பலப்படுத்துவேன் என சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, மார்ச் 28ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையில், சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்குகள் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர், வழக்கு ஒன்றின் விசாரணைக்காக டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
அப்போது, அரவிந்த் கெஜ்ரிவாலை அம்பலப்படுத்துவேன் என அவர் தெரிவித்தார். கெஜ்ரிவால் மற்றும் அவரது அணிக்கு எதிராக அப்ரூவராக மாறுவேன் என்று கூறிய சுகேஷ் சந்திரசேகர், கெஜ்ரிவால் அவர்களே, திகார் சிறைக்கு வருக என்றும் வரவேற்றார்.