30 லட்சம் குடும்பங்களுக்கு பிரதமர் கையெழுத்துடன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து அட்டை!

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழக மக்களுக்கு தமிழில் பிரதமர் நரேந்திர மோடியின் கையெழுத்திட்ட வாழ்த்து அட்டை 30 லட்சம் குடும்பங்களுக்கு பாஜகவினர் வழங்கினர்.

அந்த வாழ்த்து அட்டையில் உலக தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்ற தலைப்பில் வாழ்த்து செய்தி இடம் பெற்றுள்ளது.

அதில், தமிழ் கலாச்சாரத்தின் துடிப்பான மரபுகள் மற்றும் ஆழமான பாரம்பரியத்தின் வெளிப்பாடாக திகழும் புத்தாண்டு வாழ்த்துக்கள். வரும் ஆண்டு அமைதி, ஆரோக்கியம் மற்றும் செழிப்பைக் கொண்டு வரட்டும் இந்த ஆண்டு. அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, வெற்றி மற்றும் நிறைவைக் கொண்டுவரட்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த வாழ்த்து அட்டையை தமிழகம் முழுவதும் 30 லட்சம் குடும்பங்களுக்கு வீடு, வீடாக பாஜக நிர்வாகிகள் வினியோகித்தனர். இதனை தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top