கர்நாடக மாநிலம், ஹூப்பள்ளியில் லவ் ஜிகாத்தால் படுகொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தையை தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சந்தித்து ஆறுதல் கூறினார்.
கர்நாடகா மாநிலம், ஹூப்பள்ளி – தார்வாட் மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் நிரஞ்சன் ஹிரேமத். இவரது மகள் நேஹா 22; ஹூப்பள்ளியில் தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ., முதலாம் ஆண்டு படித்தார். கடந்த 18ம் தேதி மாலை, கல்லூரி முடிந்து வளாகத்தில் நடந்து சென்றார்.
நேஹாவை வழிமறித்த பயாஸ் 19, என்ற இஸ்லாமிய மாணவர், தன்னை காதலிக்க வேண்டும் தனது மதத்திற்கு மாற வேண்டும் என்று வற்புறுத்தினார். அதற்கு மாணவி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் பயாஸ், மாணவி நேஹாவை கத்தியால் சரமாரியாக குத்தி படுகொலை செய்தார். இந்த சம்பவம் கர்நாடகா மாநிலம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு முதன் முதலாக பாஜக மற்றும் ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தது. இதனால் ஆளும் காங்கிரஸ் அரசு லவ் ஜிகாத்தை மூடிமறைக்க முயற்சி செய்தது. பின்னர் எதிர்ப்புகள் கிளம்பியதை தொடர்ந்து கொலையாளியை காங்கிரஸ் அரசு கைது செய்தது.
இந்த நிலையில், லவ் ஜிகாத்தால் படுகொலை செய்யப்பட்ட மாணவி நேஹாவின் தந்தையும், காங்கிரஸ் கவுன்சிலருமான நிரஞ்சன் ஹிரேமத்தை, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று (ஏப்ரல் 23) சந்தித்து ஆறுதல் கூறினார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அவரை சந்தித்து ஆறுதல் கூறியதற்கு கர்நாடக மக்கள் ஜே.பி.நட்டாவிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் ஆளும் காங்கிரஸ் அரசை சேர்ந்தவர்கள் ஒருவர் கூட நிரஞ்சன் ஹிரேமத்தை சந்திக்கவில்லை. இதனை அம்மாநில மக்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். வருகின்ற தேர்தலில் காங்கிரசுக்கு சரியான பாடத்தை ஹிந்துக்கள் கற்பிப்பார்கள் என்பது மட்டும் உண்மை.