கர்நாடக மாநிலம், ஹூப்பள்ளியில் கல்லூரி மாணவி நேஹா ஹிரேமத் லவ் ஜிகாத்தால் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலைக்கு பெங்களூருவில் நேற்று இரவு (ஏப்ரல் 23) பாஜக மகளிர் அணி சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலே கர்நாடகாவில் ஹிந்துக்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. அதிலும் இந்து மாணவிகள் லவ் ஜிகாத்தால் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அதுபோன்றுதான் கடந்த ஏப்ரல் 18ம் தேதி நேஹா ஹிரேமத் என்ற கல்லூரி மாணவி லவ் ஜிகாத்தால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கர்நாடகா மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தலைநகர் பெங்களூருவில் உள்ள சுதந்திர பூங்கா அருகே மாநில காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக மகளிர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதே நேரத்தில், மறைந்த நேஹாவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே மற்றும் மகளிர் அணியின் மாநிலம், மாவட்ட நிர்வாகிகள் என பலரும் பங்கேற்று தங்களது எதிர்ப்பை காங்கிரஸ் அரசுக்கு தெரிவித்தனர்.